கூகுள் நிறுவனத்திற்கு அபராதம் போட்ட பிரான்ஸ் ! காரணம் என்ன?

கூகுள் நிறுவனத்திற்கு ரூ.4,400 கோடி அபராதம் விதித்துள்ளது பிரான்ஸ்

பிரபல இணைய தேடுதல் வலைத்தளமான கூகுள் நிறுவனத்திற்கு ரூ.4,400 கோடி அபராதம் விதித்துள்ளது.

காரணம் என்ன:

ஐரோப்பிய ஒன்றியம் கொண்டுவந்த புதிய டிஜிட்டல் விதிமுறைகளின் படி கூகுள், ஃபேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள், ஊடகங்கள் வெளியிடும் செய்திகளைத் தங்கள் தளங்களில் பயன்படுத்திக்கொள்ள, அந்த செய்தி நிறுவனங்களுக்கு இழப்பீடாக ஒரு தொகையைத் தர வேண்டும். என கோரிக்கை வைத்தன.

பிரபல செய்தி நிறுவனங்களின் செய்திகளை வெளியிடும் போது கூகுள் நெய்பரிங் ரைட்ஸ் என்பதன் அடிப்படையில் உரிய பணப்பலன் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தன ஊடகங்கள்.

அதற்காக வெளிப்படையான பேச்சுவார்த்தைக்கும் அழைப்பு விடுத்தன. ஆனால், அதற்கு கூகுள் நிறுவனம் பேச்சுவார்த்தைக்கு வராத காரணத்தால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், கூகுள் நிறுவனம் செய்தி நிறுவனங்களுக்கு இழப்பீடு 2 மாதங்களுக்கு வெளியிட வேண்டும். அவ்வாறு செய்ய கூகுள் தவறினால் நாள் ஒன்றுக்கு 9 லட்சம் யூரோ அபராதமாக விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

இது இந்திய ரூபாயின் மதிப்பில், கிட்டத்தட்ட ரூ.79 கோடி ஆகும். கூகுள் நிறுவனத்தின் மீது ஏஎஃப்பி, ஏபிக், எஸ்இபிஎம் ஆகிய செய்தி நிறுவனங்கள் கூகுள் மீது புகார் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.