உடனடியாக இந்த நாட்டைவிட்டு வெளியேறுங்கள்… தன் குடிமக்களுக்கு பிரான்ஸ் அறிவுறுத்தல்

ஆப்கானிஸ்தானில் வாழும் தன் நாட்டுக் குடிமக்களை உடனடியாக அந்நாட்டிலிருந்து வெளியேறுமாறு பிரான்ஸ் அறிவுறுத்தியுள்ளது.

அமெரிக்கா தலைமையிலான வெளிநாட்டுப் படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியதும், தாலிபான்கள் ஆப்கானிஸ்தானின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துக்கொண்டுள்ளார்கள்.

ஆகவே, இந்தியா, சீனா முதலான நாடுகள் தங்கள் குடிமக்களை ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற்றி வருகின்றன, சில நாடுகள் தங்கள் குடிமக்களை உடனடியாக அந்நாட்டிலிருந்து வெளியேறும்படி அறிவுறுத்தியுள்ளன. தற்போது பிரான்சும் அந்த வரிசையில் தன் குடிமக்களை ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறும்படி அறிவுறுத்தியுள்ளது.

இம்மாதம் (ஜூலை) 17ஆம் திகதி, தன் நாட்டு மக்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறுவதற்கு வசதியாக சிறப்பு விமானம் ஒன்றை பிரான்ஸ் அனுப்ப உள்ளது.

காபூலிலிருந்து புறப்படும் அந்த விமானத்தை அனைத்து பிரான்ஸ் நாட்டவர்களும் பயன்படுத்திக்கொள்ளுமாறும், விமான கட்டணம் இலவசம் என்றும் ஆப்கானிஸ்தானிலுள்ள பிரான்ஸ் தூதரகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் ஜூலை 17க்குப் பின் ஆப்கானிஸ்தானில் தங்குவோரின் பாதுகாப்புக்கு தாங்கள் பொறுப்பில்லை என்றும் தூதரகம் தெரிவித்துள்ளது.