டைரக்டருடன் தனுஷ் மோதல்?

கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இது அவருக்கு 43-வது படம். நாயகியாக மாளவிகா மோகனன் வருகிறார். இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது. சில தினங்களுக்கு முன்பு தனுசுக்கும் கார்த்திக் நரேனுக்கும் படப்பிடிப்பில் மோதல் ஏற்பட்டதாகவும், இதனால் படத்தில் இருந்து கார்த்திக் நரேன் விலகி விட்டதாகவும் சமூக வலைத்தளத்தில் தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. மீதி காட்சிகளை தனுசே இயக்கி வருவதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு தளத்தில் தனுசும் கார்த்திக் நரேனும் பேசிக்கொண்டிருக்கும் புகைப்படம் வெளியாகி உள்ளது. இதன்மூலம் இருவருக்கும் மோதல் பிரச்சினை இல்லை என்பது உறுதியாகி உள்ளது. தனுஷ் ஏற்கனவே நடித்து முடித்த அந்த்ராங்கி ரே இந்தி படம் திரைக்கு வர தயாராக உள்ளது. தி கிரே மேன் ஹாலிவுட் படத்திலும் நடித்து முடித்துள்ளார். கார்த்திக் நரேன் படத்தை முடித்தபிறகு செல்வராகவன் இயக்கும் நானே வருவேன் பேய் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் பெயரை மாற்ற படக்குழுவினர் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.