பிரபல முன்னணி இயக்குனர் சிகிச்சை பலனின்றி மரணம்- சோகத்தில் திரையுலகம்

தெலுங்கு சினிமாவின் திரைப்பட விமர்சகர், திரைக்கதை ஆசிரியர், இயக்குநர், நடிகர் என பன்முகத்திறமைக் கொண்ட நடிகர் மகேஷ் காத்தி.

இவர், சமீபத்தில் நெல்லூரிலிருந்து தனது காரில் ஹைதராபாத் செல்லும்போது, லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானார்.

இதையடுத்து, படுகாயமடைந்த அவர், கடந்த இரண்டு வாரங்களாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதனிடையே, தற்போது சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், தெலுங்கு சினிமாவின் பிரபல திரைப்பட விமர்சகரான மகேஷ் காத்திக்கு பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது.