எப்பொழுதும் அதிர்ஷ்டம் உங்களோடு இருக்க வேண்டுமா? குளிக்கும் தண்ணீரில் இதைப்போடுங்கள்!

அந்த காலத்தில் ராணிகள், இளவரசிகள் பின்பற்றி வந்த ஒரு பழமையான முறையைப் பற்றி தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

தினமும் நீங்கள் குளிக்கின்ற தண்ணீரில் இந்த பொருளை சேர்க்க வேண்டும். அது எந்த பொருள். வாசனை மிகுந்த பன்னீர் ரோஜா தான் அந்த பொருள்.

ரோஜா இதழ்களை தனித்தனியாக பிரித்து எடுத்து நன்றாகக் கசக்கி சாறு பிழிந்து அந்த தண்ணீரை குளிக்கின்ற தண்ணீரில் கலந்தும் குளிக்கலாம்.

அப்படி இல்லை என்றால் ரோஜா விழுதை நன்றாக அரைத்து எடுத்து, அந்த விழுதை முகம் கை கால்களில் தேய்த்தும் குளிக்கலாம்.

மேலும், தினமும் ரோஜா பூ கிடைத்தால், தினமும் இந்த குளியலை மேற்கொள்ளலாம். முடியாதவர்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் அல்லது மூன்று நாள் இப்படி குளித்தாலும் பரவாயில்லை. அது உங்களுடைய விருப்பம் தான். முயற்சி செய்து பாருங்கள்