ஆபாச வீடியோக்கள் மூலம் கோடிகளில் புரண்ட மதன்! மனைவி கிருத்திகாவின் பரபரப்பு பேட்டி

யூடியூப்பில் தகாத வீடியோக்கள் மூலம் இளைஞர்களை தவறான வழிக்கு தூண்டியதாக பப்ஜி மதன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் 18ம் தேதி கைதான மதனை, காவலில் எடுத்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதன் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்த மதன், சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.

மேலும் அவரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதுடன், 2 சொகுசு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில் இன்று மதன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது, ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்த மதனின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இவருடன் கைதாகி சிறையில் இருந்த மனைவி கிருத்திகாவுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கிருத்திகா, மதன் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை சட்டரீதியாக எதிர்கொள்வேன் என தெரிவித்தார்.

மேலும் அவர் பணமோசடி எதையும் செய்யவில்லை என்றும், சொத்துக்கள் வாங்கி குவிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.