காஜலின் ஸ்லிம்மான உடலுக்கு காரணம் இது தானாம்.!

பிரபல நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் கோலிவுட்டில் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமடைந்தவர். இவர், தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு என்று தென்னிந்திய மொழிகள் பலவற்றிலும் நடித்திருக்கிறார்.

தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வருகின்ற இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகின்றார். கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்புகள் தடைபட்டுள்ளது.

இத்தகைய நிலையில்தான் திடீரென்று காஜல் அகர்வால் தனது நீண்டநாள் நண்பரை திருமணம் செய்து கொண்டார். அதற்கு பிறகு தனது கணவருடன் இணைந்து ஒரு தொழிலை ஆரம்பித்துள்ளார்.

இந்த நிலையில் தனது உடல் ஸ்லிம்மாக இருப்பதற்கு காரணம் இந்த உணவுகள் தான் என்று ஒரு பட்டியலை அவர் வெளியிட்டு இருக்கின்றார். இது மிகவும் பயனுள்ள வகையில் இருப்பதாக தெரிவித்து ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.