விடாமல் அடித்த 3 பெண்கள்… கதறியழுது துடிதுடித்த 7 வயது சிறுவன் உயிரிழப்பு… வெளியான முக்கிய தகவல்!

பேய் ஓட்டுவதாக கூறி மூன்று பெண்கள் 7 வயது சிறுவனை அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பெற்றோருடன் வசித்து வந்த 7 வயது சிறுவன் சில நாட்களாக உடல்நிலை சரியில்லைாமல் இருந்துள்ளான்.

இதனால் சிறுவனுக்கு பேய் பிடித்திருப்பதாக கூறி உறவினர்கள் கருதியதையடுத்து, மூன்று பெண்கள் சிறுவனின் உடலில் இருந்து பேய் ஓட்டுவதாக கூறி அடித்து துன்புறுத்தியுள்ளனர்.

சிறுவன் கதறியும் விடாமல் தாக்கியதால் ஒரு கட்டத்தில் சிறுவன் மயங்கி விழுந்துள்ளான். பின்பு உறவினர்கள் சிறுவனை எழுப்ப முயன்ற போது, பரிதாபமாக உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சிறுவனை அடித்து கொலை செய்த கேவி குப்பத்தை சேர்ந்த பாக்கியலட்சுமி, திலகவதி, கவிதா ஆகியோர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

சிறுவனுக்கு மருத்துவ முறையில் உடல்நிலை சரி இல்லாததை பேய் பிடித்ததாக கூறி இரவு முழுவதும் அடித்தே கொலை செய்தனர் என 3 பெண்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சிறுவனின் தாய் உள்பட 3 பெண்களை கண்ணமங்கலம் பொலிசார் கைது செய்த நிலையில், சிறுவனின் உடலில் பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதனிடையே, வலிப்பு வந்து சிறுவன் இறந்துவிட்டதாக கைதான மூன்று பெண்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.