சீனாவில் 100 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி…. வெளியான தகவல்!

கொரோனா என்ற பெரும் தொற்று சீனாவில் உருவானது. தற்போது உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த நிலையில் பொது மக்களுக்கு தடுப்பூசியை செலுத்துவதில் சீனா தீவிரம் காட்டி வருகிறது.

இதுவரை சீனாவில் 100 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று அந்த நாட்டு சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது .என்றாலும் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை எவ்வளவு என்ற விவரத்தை சீனா வெளியிடவில்லை.