சூர்யாவின் வாடிவாசல் பட அடுத்த அப்டேட்..!!

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள திரைப்படம் வாடிவாசல்.

கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இப்படம் ஜல்லிக்கட்டு விளையாட்டை மையமாக வைத்து தயாராக இருக்கிறது.

இதில் சூர்யா தந்தை-மகன் என இரு வேடங்களில் நடிக்க உள்ளதாக கூறுகின்றனர். கொரோனா காரணமாக விறுவிறுப்பாக நடந்துவந்த படத்தின் ஷுட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது.

அடுத்த கட்ட படப்பிடிப்பிற்கு சுமார் 40 பேர் வேண்டும், கொரோனா நேரத்தில் அவ்வளவு பேரையும் ஒன்றாக நிற்க வைப்பது சரியாக இருக்காது என்பதால் தற்போதைக்கு சூட்டிங் தொடங்கவில்லை என வெற்றிமாறன் சில மாதங்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

தற்போது வந்துள்ள செய்தி என்னவென்றால் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.