5 பெண் குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்த தாய்! தண்டவாளத்தில் வரிசையாக கிடக்கும் 6 சடலங்கள்

இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் பெண் ஒருவர் 5 குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தின் Mahasamund நகரிலே இத்துயர சம்பவம் நடந்துள்ளது.

உயிரிழந்த பெண் மற்றும் 5 குழந்தைகள் பெம்ச்சா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

ஐந்தும் பெண் குழந்தைகள் எனவும், குழந்தைகள் 10 முதல் 17 வயதுடையவர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது.


சம்பவம் குறித்து பொலிசார் அளித்த தகவலின் படி, நேற்று இரவு அப்பெண் தனது கணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும். இதன் காரணமாக அவர் இந்த தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

எனினும் இது தற்கொலையா கொலையா என்பதை உறுதி செய்ய பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.