மற்றுமொரு ஆடைத்தொழிற்சாலையிலும் கொரோனா….

மகியங்கனை பிரதேசத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் 90 கொவிட் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

குறித்த ஆடைத் தொழிற்சாலையில் கடந்த ஜூன் மாதம் 2 ஆம் திகதி 100 ஊழியர்களிடம் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 18 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பின்னர் மேலும் 100 ஊழியர்களிடம் பி சிஆர் பரிசோதனை மேற்கொண்டதில் 38 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 8 ஆம் திகதி குறித்த தொழிற்சாலை ஊழியர்கள் 385 பேரிடம் இறுதியாக மேற்கொண்ட பிசிஆர் பரிசோதனையில் 34 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதை தொடர்ந்து ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களின் சுமார் 120 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கொவிட் தொற்றாளர்களாக இனங்காணப்பட்ட ஊழியர்கள் சிலர் தற்போது இடைநிலை கொவிட் சிகிச்சை மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இறுதியாக இனங்காணப்பட்ட தொற்றாளர்கள் இன்று மாலை சிகிச்சை மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.