சொல்ல முடியாத வகையில் துன்புறுத்தல்! தூக்கில் சடலமாக தொங்கிய திருமணமான 27 வயது பெண்…

தமிழகத்தில் கணவரின் சித்ரவதை தாங்க முடியாமல் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவத்தின் அதிர்ச்சி பின்னணி வெளியாகியுள்ளது.

சென்னை அம்பத்தூரை சேர்ந்தவர் மூர்த்தி (33).இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி வித்யாகுமாரி (27).

இவர்களுக்கு திருமணமாகி 5ஆண்டுகள் ஆகிறது.தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளன. வித்யாகுமாரிக்கு திருமணத்தின்போது பெற்றோர் 13 சவரன் தங்க நகைகளும், பைக் வாங்குவதற்கு ரூ.65 ஆயிரம் பணமும் மற்றும் சீர்வரிசை பொருட்களும் வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.

இதற்கிடையில், மூர்த்தி தனது மனைவி வித்யாகுமாரியிடம் பெற்றோரிடம் சென்று பணம் வாங்கி வருமாறு அடிக்கடி தகராறு செய்துள்ளாரார்.

மேலும், அவரை இரக்கமின்றி அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை தம்பதிக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. பின்னர், மூர்த்தி வீட்டில் இருந்து வேலைக்கு சென்றுவிட்டார்.

அதன்பிறகு, வித்யாகுமாரி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சடலத்தை மீட்டனர்.

இது குறித்து வித்யாகுமாரின் தாய் மீனாட்சி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதில், எனது மகள் வித்யாகுமாரியிடம் கணவர் மூர்த்தி பணம் கேட்டு அடித்து உதைத்து சொல்ல முடியாத வகையில் துன்புறுத்தியுள்ளார்.

இதன் காரணமாக, அவர் தற்கொலை செய்து கொண்டார். அவரது இறப்புக்கு காரணமான கணவர் மூர்த்தி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.