சிறுமியை இணையவழி ஊடாக பாலியல் தொழிலுக்கு விற்பனை செய்த நபர் கைது!

கல்கிசை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர், பாலியல் நடவடிக்கைக்காக இணையத்தில் விளம்பரம் இட்டு 15 வயது சிறுமி ஒருவரை விற்க முற்பட்டபோது கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவர் கல்கிசை பகுதியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து சிறுமியை தடுத்து வைத்துள்ளதோடு, சிறுமியின் நிழல்படத்தை எடுத்து இணையத்தில் விளம்பரப்படுத்தி பாலியல் நடவடிக்கை மேற்கொண்டமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டதை தொடந்து சிறுமியின் தாயாரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

35 வயது மதிக்கதக்க சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டு மொரட்டுவ நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.