இலங்கையில் ஒரே நாளில் இதுவரை இல்லாத கொரோனா உயிரிழப்பு பதிவு!

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்று மாலை வரை மேலும் 67 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,910 ஆக அதிகரித்துள்ளது. இது நாட்டின் சனத் தொகையுடன் ஒப்பிடுகையில் அதிகரிப்பாகவே பார்க்கப் படுகிறது.

இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 2,168 பேர் நேற்று பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.