யாழ் மாவட்டத்தில் ஐந்து குழந்தைகளுககு கோவிட் தொற்று உறுதி

யாழ்ப்பாணத்தில் ஒரு மாத குழந்தைகள் உட்பட 5 குழந்தைகளுக்கு கோவிட் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம்- பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்ட, பிறந்து 12 நாட்களேயான குழந்தை ஒன்றுக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது.

அதேபோன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிறந்து 20 நாட்களேயான குருநகர் பகுதியை சேர்ந்த குழந்தை ஒன்றுக்கும் அதன் தாய்க்கும் கோவிட் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், முதிராக் குழந்தைகளுக்கான அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள 29 நாட்களேயான குழந்தை ஒன்றுக்கும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், இளவாலைப் பகுதியை சேர்ந்த 9 மாதக் குழந்தை ஒன்றுக்கும் மானிப்பாய்ப் பகுதியைச் சேர்ந்த 10 மாதக் குழந்தைக்கும் அதனது பெற்றோருக்கும் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.