யாழில் 31 பேர் உட்பட வடக்கில் 52 பேருக்கு தொற்று!

யாழ்.மாவட்டத்தில் 31 பேர் உட்பட வடக்கில் 52 பேருக்கு நேற்றய தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.

அதன்படி யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூட முடிவுகளில் யாழ். உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த 24 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

அத்துடன் யாழ்.போதனா வைத்தியசாலையின் ஆய்வுகூட முடிவுகளில் யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த 07 பேர் உட்பட வடக்கில் 28 பேரும் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.