பிரான்சில் மேலும் 8,541 பேருக்கு கொரோனா….

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று அமெரிக்கா, இந்தியா, பிரேசில் உள்ளிட்ட சில நாடுகளில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. பிரான்ஸ் நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைவாக பதிவாகி வருகிறது.

உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் பிரான்ஸ் தற்போது 4-வது இடத்தில் உள்ளது

இந்நிலையில், பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 8,541 ஆக பதிவாகி உள்ளது. இதன்மூலம் பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 56,66,113 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றால் மேலும் 44 பேர் உயிரிழக்க, கொரோனாவால் பலியானோர் மொத்த எண்ணிக்கை 1,09,402 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவில் இருந்து இதுவரை 53,15,194 பேர் குணமடைந்துள்ளனர், தற்போது 2,41,517 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது..