மனைவிக்கு உதட்டு முத்தம்! கனடா பிரதமர் வெளியிட்ட புகைப்படம் வைரல்

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தன்னுடைய காதல் மனைவியான ஷோபிக்கு திருமண நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ள பதிவு வைரலாகி வருகிறது.

தற்போதைய சூழலில் கனடா என்றதுமே சட்டென நினைவுக்கு வருபவர் அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தான்.

இதற்கு முன்னர் எந்த கனடா பிரதமரும் இந்தளவுக்கு பாப்புலர் ஆகவில்லை என்றே கூறலாம், இவரது காதல் மனைவி ஷோஃபி.

ஜஸ்டினின் சகோதரர் மிக்கேலின் கிளாஸ்மேட். அந்த வகையில், ஜஸ்டின் வீட்டுக்கு வந்து போய் கொண்டிருந்தபோது காதல் மலர, 2005ம் ஆண்டு மே 28ம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு யெல்லா க்ரேஸ் மார்க்கரெட், ஜேவியர் ஜேம்ஸ், ஹெர்டினின் என்ற மூன்று குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் இன்று திருமண நாளை முன்னிட்டு, தன்னுடைய மனைவிக்கு அன்பு முத்தமிடும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள ஜஸ்டின் ட்ரூடோ, மனைவிக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளார்.