பிரித்தானியாவில் மிக வேகமாக பரவி வரும் இந்தியாவின் உருமாறிய கொரோனா! எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?

பிரித்தானியாவின் இங்கிலாந்தில் 40 சதவீதம் பகுதிகளில் இந்தியாவின் உருமாறிய கொரோனா தீவிரமாக பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் ஐரோப்பிய நாடுகள் உட்பட சுமார் 40 நாடுகளுக்கு பரவிவிட்டதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

இந்நிலையில், இந்தியாவில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸின் புதிய மாறுபாடு இப்போது இங்கிலாந்தில் உள்ள 40 சதவீத உள்ளூர் பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த மே 8-ஆம் திகதி வரை குறித்த வைரஸ் 127 பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளது. இதுவே கடந்த ஏப்ரல் மாதம் 3-ஆம் திகதியுடன் ஒப்பிட்டால், ஒரே ஒரு உள்ளூர் பகுதியில் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டது.

அதன் பின் ஏப்ரல் நடுப்பகுதியில், இது 26 உள்ளூர் பகுதிகளில் பரவியது. இதனால் அந்த மாதத்தின் இறுதியில் இது 92 இடங்களில் பரவியுள்ளதாக கூறப்பட்டது.

தற்போது சமீபத்திய தரவுகளின் படி பார்த்தால், இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு குறைந்தாலும், இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ் அதிகரித்து வருவது ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

வரும் ஜுன் 21-ஆம் திகதி முதல் பிரித்தானியாவில் அனைத்து தளர்வுகளும் தளர்த்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த இந்தியாவின் B1617.2 வைரஸ் அதை கெடுத்துவிடுமோ என்று எண்ணப்படுகிறது.

மேலும், Wellcome Sanger Institute-ன் தரவுகளின் படி பார்த்தால், பெரும்பாலான இடங்களில் இந்திய மாறுபாட்டின் ஒரு வழக்கு இன்னும் பதிவு செய்யப்படவில்லை என்று கூறப்பட்டாலும், ஏப்ரல் மாதத்தில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து

இந்த நோய் பரவுகிறது என்று புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. போல்டனில், இது இப்போது பகுப்பாய்வு செய்யப்பட்ட வழக்குகளில் 81.4 சதவீதம் ஆகும், அதே நேரத்தில் 22 பிற உள்ளூர் பகுதிகளிலும் பரவி வருகிறது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு இதே வைரஸால் இங்கிலாந்தில், 331 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். அதுவே சமீபத்தில் 829-ஆக மாறியது. நேற்று சுகாதார செயலாளர் மாட் ஹான்ஹாக் இந்தியாவின் உருமாறிய கொரோனா வைரஸ் 2323 பேருக்கு பரவியுள்ளதாகவும், மக்கள் தயவு செய்து தடுப்பூசி போட்டுக் கொள்ளும் படி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்தின் உள்ளூரில் இந்திய கொரோனா வைரஸ் பரவியுள்ள பகுதிகள்

Bolton
Blackburn with Darwen
Bedford
Sefton
Hart O adby and Wigston
South Northamptonshire
Stevenage
Croydon
Canterbury
Chelmsford
Hounslow
Hillingdon
Rushmoor
Nottingham
West Lancashire
Greenwich
Brent
Broxbourne
Bromley
Camden
Dartford
Sevenoaks