மீன் குழம்பு சாப்பிட்ட புது மாப்பிள்ளை பரிதாப மரணம்!

தமிழகத்தில் காதலி வீட்டுக்கு வந்த புதுமாப்பிள்ளை மீன் குழம்பு சாப்பிட்டதால் பரிதாபமாக பலியான சோக சம்பவம் நடந்துள்ளது.

கேரளாவின் மூணாறு பகுதியை சேர்ந்தவர் நிஷாந்த்(வயது 30), சென்னையில் வேலை பார்த்து வருகிறார், இவருக்கும் சோழபுரம் பகுதியை சேர்ந்த கல்பனா என்ற பெண்ணுக்கும் காதல் மலர்ந்தது.

இவர்கள் காதல் குறித்து இருவீட்டாருக்கும் தெரியவர, அவர்களும் சம்மதித்து திருமணத்தை நிச்சயித்துள்ளனர்.

வருகிற 17ம் தேதி திருமணம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது, இந்நிலையில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் சென்னையில் நிஷாந்த் வேலை செய்து வந்த நிறுவனம் மூடப்பட்டது.

இதனால் தன்னுடைய காதலியை பார்க்க அ்வரது வீட்டுக்கு வந்துள்ளார், அங்கு அவருக்கு மீன் குழம்பு வைத்து சாப்பாடு கொடுத்துள்ளனர்.

அதனை சாப்பிட்ட நிஷாந்த், சிறிது நேரத்தில் வாந்தி எடுத்துள்ளார். உடனடியாக அவரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே நிஷாந்த் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து நிஷாந்தின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் மீன்சுருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து நிஷாந்தின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.