படவாய்ப்பு இல்லாததால் சீரியலில் களமிறங்கிய ஸ்ரீ திவ்யா.!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து ஹிட்டடித்த திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இதில், கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதிவ்யா. இந்த திரைப்பட்டதில் பள்ளி சிறுமியாக நடித்து காதல்வயப்பட்ட அவர்., தனது சுட்டித்தனமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்துவிட்டார்.

இதனை தொடர்ந்து அவர் சிவகார்த்திகேயனுடன், காக்கிச்சட்டை படத்திலும் அவர் நடித்திருப்பார். இதனையடுத்து, பென்சில், மருது, ஜீவா என பல படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இவர், சிவகார்த்திகேயன், விஷால், ஜிவி பிரகாஷ், அதர்வா, விஷ்ணு விஷால், என பல்வேறு இளம்தமிழ்நடிகர்களுடன் அவர் நடித்திருக்கின்றார்.

ஸ்ரீதிவ்யா தமிழை தொடர்ந்து மலையாளம், தெலுங்கு திரைப்படத்திலும் நடித்திருகின்றார். தன்னுடைய அனைத்து படங்களிலும் மிகவும் குடும்ப பாங்கான கதாப்பாத்திரத்தில் அவர் நடித்திருப்பார்.

இது, அவரது படவாய்ப்பை தட்டிப்பறித்துள்ளது. சமிபகாலமாக படவாய்ப்பு இல்லாமல் ஸ்ரீதிவ்யா தவித்து வருகின்றார். எனவே, படவாய்ப்பை பெறும் நோக்கில் அவர் தற்போது மாடர்ன் உடையில் கவர்ச்சிகாட்ட துவங்கியுள்ளார்.

மேலும் தற்போது அவரை குறித்த சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. நடிகை ஸ்ரீதிவ்யா தமிழ் சினிமாவில் நடிப்பதற்கு முன்னரே தெலுங்கில் பிரபலமான Thoorpu Velle Rallu என்கிற சீரியலில் முக்கிய ரோலில் நடித்துள்ளாராம். இதனை அறிந்த ரசிகர்கள் மிகவும் ஆச்சர்யத்தில் உள்ளனர்.