சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் நடிகை ரகுல் பிரீத் சிங்….

பிரபல பாலிவுட் இயக்குனர் ரோனி ஸ்க்ரூவாலா தயாரிக்கும் புதிய பாலிவுட் படத்தில் ரகுல் பிரீத் சிங் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். மராத்தி இயக்குனர் தேஜஸ் தியோஸ்கர் இயக்கும் இந்த படம் காமெடி கலந்த சமூக படமாக தயாராகிறது. இதில் ரகுல் பிரீத் சிங் காண்டம் பரிசோதனையாளராக நடிக்கிறார்.

இந்த கேரக்டரில் நடிக்க அனன்யா பாண்டே, சாரா அலிகான் இருவரையும் தான் முதலில் அணுகினார்கள். ஆனால் அவர்கள் மறுத்து விட்டனர். ரகுல் பிரீத் சிங் கதையையும், படத்தில் வரும் காட்சிகளையும் கேட்டுவிட்டு நடிப்பதற்கு ஒப்புக் கொண்டிருக்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. கொரோனா ஊரடங்கு காலத்திற்கு பிறகு படப்பிடிப்பு நடக்க இருக்கிறது.