கிரிக்கெட் வீரர் சாவ்லாவின் தந்தை கொரோனாவால் மரணம்

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் பியூஸ் சாவ்லாவின் தந்தை கொரோனா பாதிப்பால் மரணமடைந்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரும் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருபவருமான பியூஸ் சாவ்லாவின் தந்தை கொரோனா பாதிப்புக்கு பிறகு மரணமடைந்துள்ளார்.

கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளால் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்த பிரமோத் குமார் சாவ்லா சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்துள்ளார்.

தனது தந்தை மரணமடைந்தது குறித்து இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள பியூஸ் சாவ்லா, தந்தை இல்லாமல் எனது வாழ்க்கை முன்பு போல் இருக்காது எனது பலத்தின் தூண் போன்ற நபரை இழந்து விட்டேன் என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகமும் பியூஸ் சாவ்லாவின் தந்தை இறப்புக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.