70 கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா…

இலங்கையில் 70 கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் தற்சமயம் வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாக பொதுசுகாதார விசேட வைத்திய நிபுணர் சித்ராமாலி டி சில்வா தெரிவிக்கின்றார்.

தற்போது பரவிவரும் கோவிட் தொற்று அதிகளவில் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் சிறுவர்களையே தாக்கிவருவது கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை கோவிட் நோயாளர்களுக்கு சிகிச்கைகள் முறைப்படி அளிக்கப்படுகின்றதா அல்லது உடனடியாக வைத்தியசாலையில் சேர்க்க வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றதா என்பதை முறைப்பாடு செய்ய 1906 என்கிற அவசர தொலைபேசி இலக்கமும் மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.