ஜகமே தந்திரம் திரைப்படம் இத்தனை மொழிகளில் வெளியாகிறதா? முக்கிய தகவல்

தனுஷ் இப்போது The Gray Man என்கிற ஆங்கில படத்தின் படப்பிடிப்பிற்காக வெளிநாட்டில் உள்ளார்.

அவ்வப்போது படக்குழுவுடன் அவர் எடுக்கும் புகைப்படங்கள் வெளியாகி வருகிறது.

அதோடு அவர் தனது குடும்பத்துடனும் நேரம் செலவழித்து வருகிறார், அவர்களின் போட்டோக்களும் சமூக வலைதளங்களில் டிரண்ட் ஆகிறது.

அண்மையில் தனுஷின் கர்ணன் படம் திரையரங்கில் வெளியாகி பட்டிதொட்டி எங்கும் கலக்கியது. அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் ஜகமே தந்திரம் வெளியாக உள்ளது.

இந்த திரைப்படம் மொத்தம் 17 மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ளதாம். தமிழில் உருவான ஒரு படத்தை இத்தனை மொழிகளில் டப் செய்யப்படுவது இதுவே முதன்முறையாகும்.