சில நாட்களில் திருமணம் நடக்கவிருந்த நிலையில் 22 வயது பெண்ணுக்கு நேர்ந்த கதி!

இந்தியாவில் சில நாட்களில் திருமணம் நடக்கவிருந்த நிலையில் இளம்பெண் கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.

தெலங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் ஸ்ரீவாணி (22). இவர் கடந்த மார்ச் மாதம் 21ஆம் திகதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி ஸ்ரீவாணி உயிரிழந்தார். ஸ்ரீவாணிக்கு வரும் 13ஆம் திகதி திருமணம் செய்து வைக்க ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்தது.

அவர் நோய் தொற்றில் இருந்து மீண்டு வருவார் என வருங்கால கணவர் உள்ளிட்ட குடும்பத்தார் எதிர்பார்த்திருந்த நிலையில் அவரின் மரணம் பலத்தை அதிர்ச்சியையும் சோகத்தையும் அவர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.