8 மாத கர்ப்பிணியான 13 வயது சிறுமி… வயிற்றிலேயே கருக்கலைவு..

13 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பிணியாக்கிய காமுக கணவன் கைது செய்யப்ட்டுள்ளான்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மங்களபுரம் காவல் நிலைய எல்லைகுட்டப்பட்ட பகுதியை சார்ந்தவர் கோவிந்தராஜ். இவர் லாரி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர் 13 வயது சிறுமியை திருமணம் செய்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சிறுமி வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்ட நிலையில், அவர் 8 மாத கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும், அவரது வயிற்றில் இருந்த கரு வயிற்றுக்குள்ளேயே கலைந்துள்ளதாக தெரிவித்தனர்.

சிறுமியிடம் அவரது வயது குறித்து விசாரணை செய்கையில், அவருக்கு குழந்தை திருமணம் நடந்ததும், அதனால் சிறுமி கர்ப்பமானதும் உறுதியானது. இதனையடுத்து, சிறுமி குறித்த தகவலை மருத்துவர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலை அறிந்த காவல் துறையினர் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டு, அவரை குழந்தை திருமணம் செய்த லாரி ஓட்டுநர் கோவிந்தராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், அவருக்கு உடந்தையாக இருந்த சிறுமியின் பெற்றோர்கள் மற்றும் கோவிந்தராஜின் பெற்றோர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.