மயங்கி வீழ்ந்து உயிரிழந்த நபரிற்கு கொரோனா…..

வீதியில் மயங்கி விழுந்த ஒருவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு உயிரிழந்த நபருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதகைகளில் அவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை தெரியவந்துள்ளது.

வென்னப்புவ – புஜ்ஜம்பொல பகுதியை சேர்ந்த 50 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2ஆம் திகதி மாலை குறித்த நபர் மயங்கி விழுந்த நிலையில் மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவ்வாறு அனுமதிக்கப்பட்ட நபர் சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.