வெறும் வயிற்றில் பூண்டை ஏன் சாப்பிடவேண்டும் தெரியுமா?

சமையலுக்கு மட்டும் பயன்படுத்தும் பொருளாக மட்டுமே பூண்டை நாம் பார்க்க கூடாது. பண்டைய மற்றும் நவீன வரலாறு மூலம் பூண்டு ஒரு முக்கிய மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.

சளி, இருமல், உயர் ரத்த அழுத்தம், கீல்வாதம், பல் வலி, மலச்சிக்கல் மற்றும் தொற்று போன்ற பிரச்சனைகள் ஆகியவற்றிற்கு நிவாரணியாக பூண்டு பயன்படுகிறது.

சுகாதார நலன்களுக்காக பூண்டை உட்கொள்ளலாம். இதற்காக தினமும் வெறும் வயிற்றில் பூண்டை உட்கொள்ளலாம். இப்படி உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இப்போது பார்க்கலாம்.​

பூண்டை எப்படி சாப்பிடுவது?

இரண்டு பல் பூண்டுகளை எடுத்து அவற்றின் தோலை உரித்து அவற்றை நசுக்கவும். பின்பு அவற்றை காலை வெறும் வயிற்றில் உண்ணவும்.

அதன் பிறகு ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்கவும்​பூண்டு குறித்த ஆரோக்கிய நன்மைகள் பூண்டு உட்கொள்வது துர்நாற்றம் மற்றும் எரிச்சல் உணர்வு ஏற்படுவதற்கு வழி வகுக்கும்.

ஆனால் அதோடு உங்கள் உடல் பாதுகாப்பு முறையை அதிகரிக்க உதவுகிறது. இந்த பூண்டு பொதுவாக கலோரிகள் குறைவாகவும் வைட்டமின் சி, வைட்டமின் பி 6 மற்றும் மாங்கனீசு ஆகியவை நிறைந்தும் காணப்படுகிறது. நீங்கள் மென்று தின்னும் ஒரு பூண்டில் ஆரோக்கிய நன்மைகளை உற்பத்தி செய்யும் கந்தக கலவைகள் அதிகமாக உருவாகின்றன.

இந்த கலவை உடலில் செரிமான் சக்தியை அதிகரிப்பதுடன் உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கிறது.​காலையில் பூண்டு சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

குளிர்காலம் துவங்கியிருக்கும் இந்த சமயத்தில் பூண்டு அவசியமான மூலிகையாகும். இது நோயெதிர்ப்பு அமைப்பை மேம்படுத்துவதுடன் பிற கிருமிகளில் இருந்து போராடக்கூடிய கலவைகளும் இதில் அடங்கியுள்ளன.

நல்ல குடல் ஆரோக்கியம் மற்றும் எடை இழப்பு இரண்டும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாகும். உங்களில் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் தான் குடலின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.

நல்ல பாக்டீரியாக்களை ஊக்குவிக்க பூண்டை விட சிறந்த மருந்து எதுவுமில்லை. இதனால் ஆரோக்கியமான உடல் எடை குறைப்பிற்கு இது உதவுகிறது.

மேலும் இது வயிறு தொடர்பான பிரச்சனைகளான வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கல் போன்றவற்றை தடுக்கிறது. உடலில் உள்ள நச்சுக்களை அகற்ற பூண்டு சிறந்த மருந்தாகும்.

இதில் உள்ள சல்பைட்ரைஸ் கலவையானது உடலில் இருந்து நச்சுப்பொருட்களை அகற்றி டைபஸ், நீரிழிவு நோய், மன சோர்வு மற்றும் சில வகையான புற்றுநோய்களில் இருந்து கூட பாதுக்காப்பு அளிக்கிறது.

பொதுவாக குளிர்க்காலத்தில் தோல் வறட்சி மற்றும் தோல் அரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இப்படியான தோல் தொடர்பான நோய்களை தடுப்பதற்கான சிறந்த வழி என்றால் அது காலையில் வெறும் வயிற்றில் பூண்டு உட்கொள்வதுதான்.

தெளிவான மற்றும் மிருதுவான சருமத்தை பெற ஒவ்வொரு நாளும் காலையில் பூண்டு சாப்பிடுங்கள். பூண்டு ஒரு மூலிகை என்பதால் இது உயர் ரத்த அழுத்தத்திற்கு எதிராக போராடுகிறது.

இதில் உள்ள சல்பர் கலவைகள், அல்லிசின், டயல் டைசல்பைடு, டயல் ட்ரை சல்ப்பேட் போன்றவை உங்கள் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. ஆனால் பூண்டை அதிகமாக எடுத்துக்கொள்வது உடலுக்கு கேடு ஏற்படுத்தலாம்.

எனவே எப்போதும் குறைவான அளவே பூண்டை பயன்படுத்தவும்.​பூண்டு குறித்த எச்சரிக்கை வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடும்போது இரண்டு பல்லுக்கு மேல் உண்ண வேண்டாம்.

மேலும் உங்களுக்கு குமட்டல், வாந்தி மற்றும் மல சிக்கல் போன்ற உணர்வு உங்களுக்கு ஏற்பட்டால் காலையில் பூண்டு உண்பதை தவிர்க்கவும். கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள் இரத்த போக்கு கோளாறு, நீரிழிவு நோய், குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் இந்த வீட்டு வைத்தியத்தை முயற்சிக்க வேண்டாம்.