விபத்தில் சிக்கிய சுமந்திரன் எம்.பி

கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் வாகனம் விபத்திற்குள்ளாகியுள்ளது.

எனினும் தெய்வாதீனமாக அவருக்கு பாதிப்பு இல்லை அவர் பயணித்த வாகனம் கடுமையாக விபத்துக்குள்ளானதில் முழுமையாக சேதமடைந்துள்ளது.

மழை பெய்து கொண்டிருந்த போது, அதிவேக நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது வாகனம் வீதியில் வழுக்கி, பலமுறை உருண்டு விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளது பின்னர் மாற்று வாகனம் ஒன்றில் கல்முனை நோக்கி சுமந்திரன் பயணத்தார்..