தினமும் ஒரு துண்டு பனை வெல்லத்தை சாப்பிடுங்க…உடலில் பல அற்புதங்கள்..!!

 பனை வெல்லம் மிகவும் சுவையானது மட்டுமின்றி ஆரோக்கியமானதும் கூட. மேலும் இதன் மருத்துவ குணங்களால் இது மக்களால் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

அந்தவகையில் பனை வெல்லத்தை சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் என்னவென்பதைக் காண்போம்.

 1. பனை வெல்லம் வறட்டு இருமல் மற்றும் சளிக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படுகிறது.
 2. இது சுவாசப் பாதையில் உள்ள சளியை கரையச் செய்து இருமலில் இருந்து விடுபட உதவும்.
 3. அதோடு இது ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்சனைகளில் அவஸ்தைப்படுபவர்களுக்கு மிகவும் நல்லது.
 4. பனை வெல்லத்தில் குளிர்காலத்தில் உடலில் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுக்க தேவையான சத்துக்கள் உள்ளன.
 5. அதில் இரத்தத்தின் உற்பத்திக்குத் தேவையான இரும்புச்சத்தும், நரம்பு மண்டலத்தின் சீரான செயல்பாட்டிற்கு உதவும் மக்னீசியம் சத்தும் குறிப்பிடத்தக்கவை.
 6. பனை வெல்லம் உடலில் தேங்கியுள்ள கெட்ட நீரைக் குறைப்பதோடு, எடை இழப்பை ஊக்குவிக்க உதவும் வயிற்றுப் உப்புசத்தையும் குறைக்கும்.
 7. எனவே நீங்கள் உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் இறங்கியிருந்தால், பனை வெல்லத்தை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
 8. உங்கள் உடலில் ஆற்றல் குறைவாக இருப்பது போல் உணரும் போது, பனை வெல்லத்தை சிறிது சாப்பிடுஙகள்.
 9. எனவே தினமும் பனை வெல்லத்தை ஒரு துண்டு சாப்பிட்டு வந்தால், உடலில் ஆற்றல் சீரான அளவில் இருக்கும்.
 10. இதனால் நீண்ட நேரம் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். பனை வெல்லத்தை அன்றாட உணவில் சேர்த்து வந்தால், செரிமானம் சிறப்பாக நடைபெற்று, வயிற்று வலி போன்ற செரிமான பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவுகிறது.
 11. ஏனெனில் இது வயிற்றுக்குள் செரிமான நொதிகளை செயல்படுத்துகிறது மற்றும் குடல் பகுதிகளை சுத்தம் செய்ய உதவுகிறது. பனை வெல்லம் எலும்புகளை வலிமையாக்குகிறது.
 12. எனவே பனை வெல்லத்தை அன்றாடம் உணவில் சேர்த்து வந்தால், மூட்டு வலி மற்றும் பிற எலும்பு சம்பந்தமான பிரச்சனைகள் குறையும்.