கணவரை கொடூரமாக கொன்று வீட்டில் புதைத்த மனைவி சிக்கியது எப்படி?

தமிழகத்தில் கணவரை மிக கொடூரமாக கொன்று புதைத்த மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.

தென்காசி அருகே உள்ள குத்துக்கல்வலசை அண்ணா நகர் 9-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் தங்கராஜ், இவரது மனைவி அபிராமி (வயது 33). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தங்கராஜ் உடல்நலக்குறைவால் உயிரிழக்க, அபிராமிக்கு காளிராஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது, இருவரும் திருமணமும் செய்து கொண்டனர்.

இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு காளிராஜ் மாயமானார், இதுபற்றி அவரது அம்மா கேட்ட போது, வெளியூர் சென்று விட்டதாக தெரிவித்துள்ளார்.

வெகுநாட்கள் ஆகியும் காளிராஜ் திரும்பி வராததால், சந்தேகமடைந்த அம்மா போலீசிடம் புகார் அளித்தார், இதுபற்றி வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், தற்போது திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

அதாவது, மாரிமுத்து என்பவருடன் பழக்கம் ஏற்படவே, அவருடன் சேர்ந்து கொண்டு அபிராமி காளிராஜை கொன்றது தெரியவந்துள்ளது.

மேலும், அபிராமியை திருமணம் செய்து கொண்ட காளிராஜ் தனிக்குடித்தனம் நடத்தி வந்துள்ளார், இதற்கிடையே மாரிமுத்து என்பவருடன் அபிராமிக்கு பழக்கம் ஏற்பட்டது.

இதையறிந்த காளிராஜ் அபிராமியை கண்டித்துள்ளார், இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட ஒரு கட்டத்தில் காளிராஜை கொலை செய்ய அபிராமி திட்டமிட்டார்.

இதன்படி, சம்பவதினத்தன்று பாலில் மயக்க மருந்து கொடுத்து காளிராஜ்க்கு கலந்து கொடுத்ததுடன் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளார்.

தொடர்ந்து வீட்டு வளாகத்தில் குழிதோண்டி புதைத்துள்ளார், இதற்கு முருகேசன் என்பவர் உடந்தையாக இருந்துள்ளது தெரியவந்தது.

இதனையடுத்து காளிராஜின் சடலத்தை தோண்டி எடுத்த போலீசார், அபிராமி, மாரிமுத்து மற்றும் முருகேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.