யாரெல்லாம் இந்த காய்கறிகளை சாப்பிடக்கூடாது?

ஒவ்வொரு காய்கறிகளிலும் உடலுக்கு தேவையான ஒவ்வொரு வகையான ஊட்டச்சத்துக்கள் உள்ளது.

பல நன்மைகளை கொடுக்கக்கூடிய இந்த காய்கறிகள் சிலருக்கு சில நேரங்களில் பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தும் என்பது தெரியுமா?

அந்த வகையில் யார் யாரெல்லாம் எந்தெந்த காய்கறிகளை சாப்பிட கூடாது என்பதை காண்போம்
பூசணிக்காய்

இதில் புரதம், கொழுப்பு சத்து உள்ளது. பூசணிக்காயை, ஆஸ்துமா, தலைவலி, சைனஸ் நோயாளிகள், உடல் பருமனானவர்கள் சாப்பிடக் கூடாது.

முருங்கைக்காய்

முருங்கைக்காயில் கொழுப்பு மற்றும் இரும்புச் சத்து மற்றும் விட்டமின் ஏ, சி ஆகியவை உள்ளது. இது நரம்பு மண்டலங்களுக்கு ஊக்கம் தரும்.

முதியவர்கள், இதய நோயாளிகள், மூட்டு நோய் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது.

கத்தரிக்காய்

ஆஸ்துமா நோயாளிகள் கத்தரிக்காயை மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து சமைத்துச் சாப்பிட உடல் சூட்டை தக்க வைக்கும். ஆனால் சரும நோயாளிகள், புண், ரணம் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. அரிப்பைத் தூண்டும்.

சுரைக்காய்

சுரைக்காயில் நீர்ச்சத்து, புரதம், சுண்ணாம்புச் சத்து அதிகம் உள்ளது. இது உடல் சூட்டைத் குறைத்து குளிர்ச்சியை அதிகப்படுத்தும். இது தாகத்தை அடக்கி உடலை சுத்திகரி த்து சிறுநீர் போவதை அதிக படுத்துகிறது.ஆனால் இது பித்த வாயுவை உண்டு பண்ணும். கடுஞ்சுரைக்காய் என்று ஒரு வகை உண்டு.

புடலங்காய்

புடலங்காயில் புரதம், விட்டமின் ஏ, சுண்ணாம்புச் சத்து, கந்தகச் சத்து ஆகியவை உள்ளன. இது மூலநோய் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. இதை ஆஸ்துமா, மூட்டுவலி, தலைவலி, சளி , காய்ச்சல் மற்றும் உடம்பில் எதாவது வலி உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது.