முகத்தில் தோல் உரியுதா?

முக சருமம் உரிதல் என்பது மிகவும் வலியை ஏற்படுத்தும் மற்றும் எரிச்சலையும் ஏற்படுத்தக் கூடிய ஒன்று.

அதிகப்படியான புறஊதா கதிர்வீச்சால் உங்கள் தோல் பாதிக்கப்பட்டிருந்தால், உங்கள் தோலை சேதப்படுத்தி முக சருமம் உரிதலை ஏற்படுத்தும் காரணங்களாக அமையும்.

இதனை இயற்கை முறையில் போக்க என்ன செய்யலாம் என இங்கு பார்ப்போம்.

  • ஒரு டீஸ்பூன் அளவு தேங்காயெண்ணேய் எடுத்து டபுள் பாய்லிங் மெத்தட் முறையில் சூடாக்கி உள்ளங்கையில் தேய்த்து முகம் முழுக்க வட்டவடிவில் மென்மையான மசாஜ் போன்று தடவி எடுக்கவும். இது முகத்தில் அதிகமாக தொல் உரியும் இடங்களில் தடவி பயன்படுத்தலாம். தினமும் இரண்டு முறை செய்து வந்தால் போதும்.
  • அரை டீஸ்பூன் அளவு தேன் எடுத்து முகத்தில் தோல் உரியும் இடங்களில் தடவி கொள்ளவும். பிறகு 20 ம் உதல் 30 நிமிடங்கள் வரை ஊறவிட்டு முகத்தை கழுவி எடுக்கவும். இதை அடிக்கடி செய்யுங்கள். நேரமில்லையெனில் தினமும் இரண்டு முறையாவது செய்யுங்கள்.
  • ஆலிவ் எண்ணெய் சிறிதளவு கால் டீஸ்பூன் எடுத்து உள்ளங்கையில் தடவி முகம் முழுக்க தடவிவிடுங்கள். சருமம் பாதிக்கப்பட்ட இடத்தில் அவசியம் தடவி விடுங்கள். இதை இரவு முழுவதும் ஊறவிடலாம். தினமும் இரவில் இதை செய்து வாருங்கள்.
  • மஞ்சள் ஒன்று அல்லது 2 டீஸ்பூன் அளவு எடுத்து அதில் தயிர் சேர்த்து நன்றாக குழைத்து முகம் மற்றும் உடலில் எங்கு தோல் உரிதல் பிரச்சனை இருந்தாலும் அங்கெல்லாம் தடவி விடுங்கள். 20 முதல் 30 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி எடுங்கள். வாரத்தில் மூன்று நாட்கள் இதை செய்யலாம்.
  • புதிய கற்றாழை சிறிதளவு எடுத்து முகம் மற்றூ பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி விடவும். 30 நிமிடங்கள் கழித்து முகத்தை வெறும் நீரில் கழுவி விடவும். தினமும் 2 முறை செய்யலாம்.
  • பெட்ரோலியம் ஜெல்லி தேவையான அளவு எடுத்து முகம் முழுக்க மென்மையாக மசாஜ் செய்து விடவும். இது விரைவாக உலர்ந்ததும் மீண்டும் ஒரு அடுக்கு இதை தேய்க்கவும். இதை தடவி கொண்டே இருக்கலாம்.
  • ஒரு பங்கு ஆப்பிள் சீடர் வினிகருடன் 8 பங்கு தண்ணீர் சேர்த்து காட்டன்பஞ்சுகளை நனைத்து முகம் எல்லாம் தடவ வேண்டும். பிறகு 20 நிமிடங்கள் கழித்து முகத்தை வெற்றுநீரில் கழுவி எடுக்கவும். நேரம் கிடைக்கும் போதெல்லாம் இதை செய்யலாம்.