தனுஷ் நடிக்கும் அடுத்த படத்தின் இயக்குனர் இவர் தானா ..!!

இந்தியளவில் பிரபலமான தமிழ் நடிகர்களில் ஒருவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் சமீபத்தில் கர்ணன் படம் வெளியாகியுள்ளது.

வெளியான முதல் நாளில் சுமார் ரூ. 10 கோடி வரை தமிழகத்தில் வசூல் செய்து மாபெரும் பாக்ஸ் ஆபிஸ் சாதனையை செய்துள்ளது கர்ணன்.

மேலும் நடிகர் தனுஷ் தொடர்ந்து பல திரைப்படங்களை தொடர்ந்து கமிட் செய்து வைத்துள்ளார்.

ஆம் கார்த்திக் நரேன் இயக்கத்தில் D43, சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் D44, செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன், ராம் குமார் இயக்கத்தில் D46 உள்ளிட்ட பல படங்களில் கமிட்டாகியுள்ளார்.

இந்நிலையில் தனுஷின் 47 வது படத்தை இளம் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் என்பவர் இயக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர் இதற்குமுன் ராக்கி எனும் படத்தை இயக்கியுள்ளார். இப்படம் தற்போதுவரை வெளியாகவில்லை.

மேலும் செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் சாணி காயிதம் படத்தின் இயக்குனரும் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.