ராம்சரண்-ஷங்கர் படத்தில் சல்மான்கானா?

ஷங்கரின் படம் என்றாலே பிரம்மாண்டம் தான் என்பதும் அவருடைய படத்தில் நடிக்கும் பெரும்பாலான நடிகர்கள் உச்ச நட்சத்திரங்களாக இருப்பார்கள் என்பதும் தெரிந்ததே
அந்தவகையில் அடுத்ததாக ராம் சரண் தேஜா நடிக்கும் படத்தை இயக்க ஷங்கர் திட்டமிட்டுள்ளார். இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் சிரஞ்சீவி முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக வெளிவந்த செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
தற்போது இந்த படத்தில் சல்மான்கானும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுவதால் பெரும் ஆச்சரியம் ஏற்பட்டுள்ளது. பிரம்மாண்டம் என்றால் உண்மையான பிரம்மாண்டமான படம் என்பது இதுதான் என்றும்ம் அதேபோல் இந்த படத்தின் வசூலும் மிகப்பெரிய அளவில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது
தெலுங்கில் முன்னணி நடிகர்களான சிரஞ்சீவி மற்றும் ராம் சரண் தேஜா, பாலிவுட்டின் முன்னணி நடிகரான சல்மான் கான் ஆகியோர் நடிக்கும் இந்த படத்தில் க்யாரா அத்வானி உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் இருக்கின்றனர். மேலும் தமிழ் திரையுலகில் உள்ள முக்கிய நடிகர்களும் இந்த படத்தில் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் இதுதான் உண்மையான பிரமாண்டமான படம் என்று கூறப்பட்டு வருகிறது.