குக் வித் கோமாளி அஸ்வினுக்கு திருமணம் ஆகிவிட்டதா??

சின்னத்திரையில் நம்பர் 1 நிகழ்ச்சியாக விளங்கி வருகிறது விஜய் டிவியின் குக் வித் கோமாளி.

இதில் சீசன் 2 தற்போது பைனல் போட்டியை நெருங்கியுள்ளது. வரும் தமிழ் புத்தாண்டு அன்று இந்த பைனல் போட்டியின் எபிசோட் ஒளிபரப்பாக இருக்கிறது.

இதில் அஸ்வின், கனி, ஷகீலா, பவித்ரா, பாபா பாஸ்கர் உள்ளிட்டோர் போட்டியிடவுள்ளனர். அதில் பெண் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி இருப்பவர் தான் நடிகர் அஸ்வின்.

இவர் இந்த நிகழ்ச்சிக்கு முன் குறும் படங்கள் மற்றும் சீரியல்களிலும் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இந்நிலையில் அஸ்வின் சமீபத்தில் அளித்த பெட்டியில், ” உங்களுக்கு திருமணம் முடிந்துவிட்டதா ” என்று தொகுப்பாளினி கேள்வி கேட்டுள்ளார்.

இதற்கு அதிர்ச்சியடைந்த அஸ்வின் ” எனக்கு தற்போது வரை திருமணம் ஆகவில்லை ” என கூறியுள்ளார்.