அமெரிக்காவில் குடும்பத்துடன் ‘கர்ணன்’ படம் பார்த்த தனுஷ்!

தனுஷ் நடித்த ‘கர்ணன்’ திரைப்படம் நேற்று முன்தினம் வெளியான நிலையில் இந்த படம் ஒரே நாளில் ரூபாய் 10 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து தனுஷ் படங்களிலேயே முதல் நாளில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை பெற்றது
மேலும் இந்த படம் இன்னும் ஒரு சில நாட்களில் 100 கோடி வசூலைத் தொடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் மற்ற நாடுகளிலும் இந்த படத்திற்கு நல்ல வசூல் செய்து வருவதாகத் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன
இந்த நிலையில் தமிழ் திரையுலகினர் ஏராளமானோர் இந்த படத்தை பார்த்து கொண்டாடிய நிலையில் நேற்று தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் இந்த படத்தை பார்த்துள்ளார். ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்புக்காக அமெரிக்கா சென்றுள்ள தனுஷ், தனது குடும்பத்துடன் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தங்கி உள்ளார் என்பதும் இதனை அடுத்து அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு காட்சியை அவர் குடும்பத்துடன் பார்த்துள்ளார் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது
‘கர்ணன்’
படத்தை பார்த்துவிட்டு இந்த அளவு பிரமாதமாக படம் வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்றும் மாரி செல்வராஜ் உள்பட படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் என்றும் தனுஷ் தெரிவித்துள்ளார்