மனைவி, குழந்தைகளை காண ஆசையாக வந்த ராணுவவீரர்…. நேர்ந்த துயரம்

தெற்கு காஷ்மீர், ஜப்லிபோராவைச் சேர்ந்தவர் முகமது சலீம் என்பவர் இந்திய ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார்.

சலீமுக்கு திருமணமாகி 9 வயது மகள், 6 வயது மகன் உள்ளனர். இந்நிலையில், சலீம் விடுமுறைக்காக மனைவி மற்றும் பிள்ளைகளை பார்ப்பதற்காக வீட்டிற்கு வந்துள்ளார்.

தனது மனைவி மற்றும் பிள்ளைகளை பார்க்க போகிறோம் என்ற சந்தோஷத்தில் சென்ற சலீமை, இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

இதனையடுத்து படுகாயமடைந்த ராணுவ வீரர் சலீமை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சலீம் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ராணுவ அதிகாரிகள் கூறுகையில், சலீம் விடுமுறைக்காக வீட்டிற்கு சென்றபோது லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படும் இரண்டு பயங்கரவாதிகளால் சுடப்பட்டார். அதில் அவருக்கு தலையில் பலத்த காயம் காயம் ஏற்பட்டதால் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.