சூர்யாவின் அடுத்த திரைப்படத்தை இயக்கவுள்ள இயக்குனர் மாரி செல்வராஜ், செம கொண்டாட்டத்தில் ரசிகர்கள்… வெளியான தகவல்

இயக்குனர் மாரி செல்வராஜ் தற்போது தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராக உள்ளவர், இவர் இயக்கத்தில் வெளியான முதல் திரைப்படமான பரியேறும் பெருமாள் திரைப்படம் மிக பெரிய வெற்றியடைந்தது.

மேலும் அடுத்தாக இவர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான கர்ணன் திரைப்படம் மிக சிறந்த விமர்சனங்களை பெற்று வருகிறது. இதன் முலம் தற்போது தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனராக மாரி செல்வராஜ் பார்க்கப்படுகிறார்.

இந்நிலையில் தற்போது கலைப்புலி S.தாணு தயாரிப்பில் சூர்யா நடிக்கும் அடுத்த திரைப்படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் சூர்யாவின் ரசிகர்கள் செம கொண்டாட்டத்தில் உள்ளனர். ஏனென்றால் தொடர்ந்து சூர்யா வெற்றிமாறன், சிவா, மாரி செல்வராஜ் என முக்கிய இயக்குனர்களின் இயக்கத்தில் நடிக்கவுள்ளதே அதற்கு காரணம்.