கர்ணன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நேற்று உலகமுழுவதும் வெளியான திரைப்படம் தான் கர்ணன்.

மேலும் இப்படம் திரையரங்கில் வெளியான முதல் ஷோ முதல் ரசிகர்கள் அனைவரும் இணையத்தில் சந்தோஷகமாக பதிவிட்டு வருகின்றனர், அந்த அளவிற்கு இப்படம் மிக சிறந்த விமர்சனங்களை பெற்று வருகிறது.

அதுமட்டுமின்றி இப்படம் சிறந்த விமர்சனங்களை பெற்று வருவதால் இந்த வருடத்தின் மிக பெரிய வெற்றியடைந்த திரைப்படங்களில் ஒன்றாக இருக்கும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது கர்ணன் திரைப்படம் முதலில் நாளில் தமிழகம் முழுவதிலும் ரூ.10.40 கோடி வசூல் செய்துள்ளது. இதன் முலம் 10 கோடி கிளப்பில் விஜய், அஜித், அஜித், ரஜினி, சூர்யா, சிவகார்த்திகேயனை தொடர்ந்து தற்போது நடிகர் தனுஷும் இணைந்துள்ளார்.

அதுமட்டுமின்றி கர்ணன் திரைப்படம் முதலில் நாள் சென்னையில் மட்டும் 92 லட்சம் வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.