பாரதி கண்ணம்மா சீரியலில் அடுத்து வரப்போகும் சூப்பர் கியூட் சீன்

பாரதி காதலி கண்ணம்மா, கண்ணம்மா இது பாடல் வரி. இதை கேட்டதும் உடனே மக்களுக்கு பாரதி கண்ணம்மா சீரியல் தான் முதலில் நியாபகம் வரும்.

இந்த சீரியல் ஆரம்பத்தில் சரியான வரவேற்பை பெறவில்லை என்றாலும் இப்போது இதுதான் டாப்பில் உள்ளது.

அண்மையில் ராஜா ராணி 2, பாரதி கண்ணம்மா சீரியலின் மெகா சங்கமம் நடந்தது, ஆனால் சொல்லும் அளவிற்கு இந்த சங்கமம் பெரிய அளவில் TRP பெறவில்லை.

இப்போது மெகா சங்கமம் முடிந்து தனி தனி சீரியல்களாக வந்துவிட்டது. பாரதி கண்ணம்மா சீரியலின் சமீபத்திய புரொமோ மக்களிடம் செம வைரல்.

கண்ணம்மா தனது மகளிடம் அப்பா பெயரை கூற அந்த குழந்தை தனது அப்பாவிடமே அவரது பெயர் கூற என விறுவிறுப்பாக புரொமோ உள்ளது.

இந்த நிலையில் தான் பாரதி கண்ணம்மா சீரியலில் அடுத்து வரப்போகும் ஒரு கியூட் காட்சியின் புகைப்படம் வெளிவந்துள்ளது. அதாவது அகில் கர்ப்பமாக இருக்கும் தனது மனைவி அஞ்சலியின் வயிற்றில் கை வைத்து நடிக்கும் காட்சியின் புகைப்படம் தான் அது.