கல்லூரி மாணவிக்கு உதவிய காஜல் அகர்வால்.!

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்தவர் காஜல் அகர்வால். சமீபத்தில் சில நாட்களுக்கு முன்பு தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து செய்துகொண்டு மாலத்தீவுக்கு இன்பச் சுற்றுலா சென்றிருந்தார். அவ்வப்போது தனது புகைப்படங்களை டுவிட்டரில் பதிவு செய்து கொண்டிருந்தார்.

இந்நிலையில், கல்லூரி மாணவி ஒருவர் டிவிட்டரில் காஜல் அகர்வாலிடம் தன்னுடைய தேர்விற்காக 83,000 ரூபாய் தேவை என்று கேட்டுள்ளார்.

இதைப்பார்த்த காஜல் அகர்வால் தனது உதவியாளரின் மூலமாக அந்த மாணவி சம்பந்தப்பட்ட கல்லூரி விவரங்களை கண்டறிந்து அந்த மாணவியின் வங்கிக் கணக்கில் ஒரு லட்சம் ரூபாய் செலுத்தி அந்த மாணவிக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார் காஜல் அகர்வால். இதனால் நடிகை காஜல்அகர்வாலை சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.