சிறுநீரக கல் வலியை குறைக்க வேண்டுமா?

சிறுநீரகங்களுக்குள் உருவாகும் கடினமான தாது மற்றும் உப்பு தேக்கங்கள் சிறுநீரக கற்கள் என்று அழைக்கப்படுகின்றது.

அதிகபட்ச வெப்பநிலை, அதிகப்படியான குளிர்ச்சி, உணவு முறை, போதியளவு தண்ணீர் பருகாதது ஆகியவை மட்டுமே சிறுநீரக கல் ஏற்படுவதற்கு முக்கிய காரணம்.

இந்த கல் சிறுநீரக பையில் இருக்கும் வரை எந்த அறிகுறியும் தெரியாது. ஆனால் சிறுநீரக பாதையில் அது பயணிக்கும்போது குழாயில் அடைப்பு ஏற்பட்டு கடுமையான வலி ஏற்படும்.

இந்த சிறுநீரக கல் உருவாக்கும் வலி கூர்மையானது தாங்க முடியாதது. இதனை ஆரம்பக்கட்டத் திலேயே கண்டறிந்துவிட்டால் குணப்படுத்தி விடலாம். இல்லாவிடின் இது வேறு பிரச்சினைகளை உருவாக்கி விடும்.

அந்தவகையில் சிறுநீரக வலியை குறைக்க என்ன வழிகளை பின்பற்றலாம் என பார்ப்போம்.

  • ஆப்பிள் சீடர் வினிகர் இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து அதை இரண்டு லிட்டர் நீரில் கலந்து தேவையெனில் தேன் சேர்க்கலாம். இதை நாள் முழுவதும் குடித்து கொண்டே இருக்க வேண்டும். இது அழற்சி மற்றும் எதிர்ப்பு சிறுநீரக கற்களின் அறிகுறிகளை குறைக்க செய்யும்.
  • ஒரு டீஸ்பூன் க்ரீன் டீ எடுத்து ஒரு கப் தண்ணீரில் சேர்க்கவும். இது நன்றாக கொதிக்கும் வரை வைத்திருந்து பிறகு தேனை சேர்த்து குளிர்வித்து பிறகு குடிக்க வேண்டும். தினமும் 2 முதல் 3 கப் வரை குடிக்கலாம். க்ரீன் டீ சிறுநீரக கற்களுக்கான தீர்வுகளில் சிறந்ததாக சொல்லப்படுகிறது.
  • இனிப்பு சேர்க்காத ஒரு டம்ளர் க்ரான் பெர்ரி (குருதி நெல்லி சாறு) குடிக்க வேண்டும். தினமும் இரண்டு டம்ளர் குடிகலாம். இதன் சக்தி வாய்ந்த டையூரிடிக் பண்புகள் சிறுநீரக கற்களுக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது.
  • நன்றாக பழுத்த தக்காளி பழத்தை ப்ளெண்டரில் மசித்து மிளகுத்தூள் சிட்டிகை உப்பு தேவையெனில் சேர்த்து ஒரு டம்ளர் குடிக்கலாம். தினமும் ஒரு டம்ளர் அளவு குடித்தால் போதும். தக்காளி சிறுநீரக கற்களை தடுக்க கூடிய இயற்கையான ஆக்ஸிஜனேற்ற லைகோபீனின் மூலமாகும்.
  • எலுமிச்சை நடூத்தர அளவிலான பாதியை எடுத்து அதை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து விடவும். தேவையெனில் சிறிது தேன் சேர்க்கவும். தினமும் இரண்டு முறை வெறும் வயிற்றிலும் இரவு உணவுக்கு முன்பும் இதை குடிக்கலாம். ஏனெனில் இது சிறுநீர் கழிக்கும் போது உண்டாகும் வலி மற்றும் அதன் அறிகுறிகளை தணிக்க செய்யும்.
  • அரை கைப்பிடி அளவு துளசி இலைகளை எடுத்து நசுக்கி எடுக்கவும். இதனுடன் தேன் கலந்து ஏதேனும் பழச்சாறு அல்லது நீரில் கலந்து குடிக்கலாம். இதை தினமும் ஒரு முறை குடித்து வந்தால் போதுமானது. இது சிறுநீரக கல் உருவாவதை தடுக்கும்.
  • எப்சம் உப்பு – 1 கப் குளிக்கும் நீரில் ஒரு கப் எப்சம் உப்பு சேர்க்கவும். இதை 20 நிமிடங்கள் வரை ஊறவைக்கவும். வாரத்தில் மூன்று நாட்கள் வரை இதை செய்ய வேண்டும். இது சிறுநீரக கல் அபாயத்தை குறைக்க செய்யும். கற்களின் அளவையும் குறைக்கும்.
  • 5 அல்லது 6 பல் பூண்டு எடுத்து 1 கப் தண்ணீர் விட்டு அதில் கலந்து தேன் சேர்த்து கலக்கவும். பூண்டு நன்றாக வெந்ததும் அதை கலக்கி குடிக்க வேண்டும். தினமும் 1 அல்லது 2 முறை குடிக்க வேண்டும். இது உங்கள் சிறுநீரகங்களை தொற்று நோயிலிருந்து பாதுகாக்க செய்கிறது.
  • கோதுமை புல் – 1 கப், தேன் தேவைக்கு. கோதுமை புல் சாறு கடைகளில் கிடைக்கும். இதனுடன் தேன் சேர்த்து தினம் ஒரு கப் வீதம் குடிக்க வேண்டும். இது சிறுநீரக கற்களால் உண்டாகும் திவிர சேதத்திலிருந்து பாதுகாக்கும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளை கொண்டுள்ளது.
  • இதை மருந்தாக சொல்லமுடியாது. ஆனால் தினசரி குடிக்க வேண்டிய தண்ணீரின் அளவை குறைக்க வேண்டாம். தினமும் 10 முதல் 12 முறையாவது குடிக்க செய்யுங்கள். இது சிறுநீரக கல் உருவாவதை தடுப்பதோடு சிறுநீரகத்தில் இருக்கும் கல்லை கரைக்கவும் உதவுகிறது. உடலை நீரேற்றமாக வைத்திருக்கவும் செய்கிறது.