மைத்ரி-ரணிலிடம் நட்டஈடு கோரி நோட்டீஸ்

ஈஸ்டர் தாக்குதலில் காயமடைந்த சட்டத்தரணி மோதித்த ஏக்கநாயக்க என்பவர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடம் நட்டஈடு கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கூறப்படுகின்றது.

இவர்கள் தவிர முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ, முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன உட்பட மேலும் 10 பேருக்கு இந்த நோட்டீஸை அவர் அனுப்பிவைத்துள்ளார்.

அதேபோல, ஈஸ்டர் தினத்தன்று கொழும்பு, ஷெங்கரிலா விடுதியில் தாம் இருந்தபோது பாதுகாப்பை உறுதிசெய்யத்தவறியமைக்காக ஹோட்டல் நிர்வாகம் தனக்கு 1.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை நட்டஈடாக வழங்க வேண்டும் என்றும் குறித்த நபர், அனுப்பிவைத்திருப்பதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.