கோழி இறைச்சிப் பிரியர்களுக்கான செய்தி

கோழி இறைச்சியின் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இது தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர்,

கோழி இறைச்சியின் அதிகபட்ச விலையில் நாங்கள் எந்த மாற்றமும் செய்யவில்லை.

நுகர்வோர் விவகார ஆணையம் விலை உயர்வுக்கு ஒப்புதல் கேட்கவில்லை. அவர்கள் நிலைமையை விளக்கினர் என்றார்.

எனினும், சிங்கள தமிழ் புத்தாண்டுக்குள் ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை 800 ஐ தாண்டக்கூடும் என்று முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் சரத் அத்தநாயக்க தெரிவித்திருந்தார்.

விலங்குகளின் தீவன விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் இந்த நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.