அக்சர்பட்டேலை தொடர்ந்து… CSK-வில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு!

ஐபிஎல் தொடர் இன்னும் சில நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், சென்னை அணியில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்ய்பபட்டுள்ளது.

இந்தியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடர் வரும் 9-ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதற்காக வீரர்கள் அனைவரும் பயோ பப்புளுக்குள் இருக்கின்றனர்.

கடுமையான கொரோனா விதிகளை கடைபிடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான அக்சர் பட்டேலுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து தற்போது , சென்னை அணியின் ஊழியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை அணியின் சமூக ஊடக பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இவர் கடந்த சில நாட்களாக பயிற்சியாளர் மற்றும் வீரர்களுடன் நின்று பேசவில்லை என்பதை அணி நிர்வாகம் உறுதி செய்துள்ளதால் சென்னை அணி வீரர்களுக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை என்றும் வழக்கமான பயிற்சிகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.