3 பிஞ்சுகளின் உயிரைப்பறித்த தகப்பனின் குடி!

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட வட்டக்கச்சி பிரதேசத்தில் தனது மூன்று பிள்ளைகளுடன் தாயார் ஒருவர் “கடிதம் எழுதி வைத்துவிட்டு” கிணற்றுக்குள் குதித்த சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியிருந்தது.

கிணற்றுக்குள் குதித்த தாயார் கிணற்றின் படிக்கற்களை பிடித்ததினால் உயிர் தப்பிய நிலையில் மூன்று பாலகர்களும் பரிதாபமாக உயிரிழந்தமை பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் ஒன்றரை வயதுடைய கிருபாகரன் டேனேஸ், ஐந்து வயதுடைய கிருபாகரன் அக்சயா, எட்டு வயதுடைய கிருபாகரன் கிருத்திகா ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

இதுபோல சினிமாவில் பார்த்த சம்பவங்கள் உள்ளன. நல்ல தங்காள் கதையும் உள்ளது. ஆனால் இன்று நமது தாயகத்தில் இந்த சம்பவம் அரங்கேறியதை எம்மால் ஜீரணிக்கமுடியவில்லை.

குடும்பங்கள் சீரழிந்து போவதற்கு காரணம் ஆண்களின் அதிகமான போதைப்பழக்கமே எனவே தயவு செய்து குடியை விட உங்கள், குடும்பத்தை நேசியுங்கள் என பலரும் வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர்.

அதேவேளை யுத்த காலத்தில் கூட எந்தவொரு தாயும் இந்த பாதகத்தை செய்ததில்லை என பலர் தமது ஆதங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதேவேளை அண்மைகாலங்களாக தமிழர் பிரதேசங்களில் அதிகரித்துவரும் குடும்ப வன்முறைகள் காரணமாக பல உயிர்கள் பறிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.