யாழ் பிரபல திரையரங்கு ஒன்றில் சிலருக்கு ஏற்பட்ட ஆபத்து!

யாழ்ப்பாணம் நகரத்திலுள்ள பிரபல திரையரங்கு ஒன்றில் சிலருக்கு கொரோனா தொற்றுக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹார்கில்ஸ் சதுக்கத்திலுள்ள திரையரங்கில் பணியாற்றும் பணியாளர்கள் 7 பேருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் மட்டும் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவிக்கின்றது.

இதன்படி உடுவிலில் ஒருவர், மாநகரில் ஒருவர், பல்கலைக்கழக மாணவர் ஒருவர், யாழ் போதனா வைத்தியசாலையில் ஒருவர் என திரையரங்க பணியாளர்களையும் சேர்த்து யாழ்ப்பாணத்தில் இன்று 11 பேருக்கு தொற்று உறுதியானது.